20 வயது இளம் நடிகர் பரிதாப பலி: மருத்துவ சிகிச்சையில் தவறா?

  • IndiaGlitz, [Monday,July 08 2019]

20 வயது இளம் நடிகர் ஒருவர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருந்தபோது தூக்கத்திலேயே மரணம் அடைந்தார்.

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் நடிகர் கேமரூன் பாய்ஸ். 20 வயதே ஆன இவர் டிஸ்னியின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்த நடிகர்.

இந்த நிலையில் சமீபத்தில் கேமரூனுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின்னர் தூக்கத்திலேயே கேமரூன் உயிர் பிரிந்ததாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் தவறு ஏற்பட்டதா? என்பது குறித்த விசாரணை நடைபெறவுள்ளது.

மக்கள் மனதில் இடம்பிடித்து இளம் வயதிலேயே பலியான நடிகருக்கு உலகம் முழுவதிலும் இருந்து இரங்கல்கள் குவிந்து வருகின்றனர். வருங்காலத்தில் ஒரு மிகப்பெரிய ஸ்டாராக ஆகும் அளவுக்கு திறமையிருந்த ஒரு நடிகர் இளம் வயதிலேயே பலியானது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.