பிங்க் பிகினிக்கு இத்தனை லட்சம் லைக்ஸா? பாலிவுட் நடிகையின் அல்ட்ராசிட்டி பிக்!
- IndiaGlitz, [Saturday,August 07 2021]
எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை திஷா பதானி. சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்கடிப்பவர். பாலிவுட்டில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் இவர் ஹாலிவுட் சினிமாவில் உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி ஜானுடன் நடித்துள்ளார்.
நடிப்பை தவிர இசை ஆல்பத்தில் பாடுவதில் ஆர்வம் காட்டிவரும் நடிகை திஷா பதானி எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கூடவே வொர்க் அவுட் மற்றும் பிட்னஸ் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தனது ஃபிட் உடலமைப்பை வெளிக்காட்டும் விதமாக அவ்வபோது பிகினி புகைப்படங்களையும் அவர் ஷேர் செய்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நேற்று பதிவிட்ட பிங்க் நிற பிகினி உடை புகைப்படத்திற்கு 14 லட்சத்தை தாண்டி லைக்குகள் குவிந்து வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு “லோஃபர்” எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான நடிகை திஷா பதானி பின்னர் “எம்.எஸ்.தோனி“, ஜாக்கி ஜானுடன் “குங்க்ஃபூ யோகா“, “பாஹி2“, “மலாங்“, “வெல்கம் டூ நியூயார்க்“ போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாவில் 45.5 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற நடிகை திஷா பதானியின் பிங்க் பிகினி புகைப்படம் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.