80 கிலோ வெயிட்டை தூக்கி செம மாஸ் காட்டும் பிரபல நடிகை… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நடிகைககள் என்றாலே ஃபிட்னஸ் ஃப்ரீக்காக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர். அந்த வகையில் படு ஃபிட்டான உடல்வாகு உள்ளவர்தான் நடிகை திஷா பதானி. பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் தற்போது வொர்க் அவுட் செய்திருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பாலிவுட் நடிகை திஷா பதானியை ரசிகர்கள் சிலர் ஹாட்டஸ்ட் நடிகை என்றும் சிலர் பேஷன்ஸ்டா என்றும் சிலர் ஃபிட்னஸ் ஃப்ரீக் என்றும் கூறுவதை கேட்டிருப்போம். ரசிகர்கள் கொடுத்திருக்கும் இந்தப் பட்டங்களுக்கு எல்லாம் ஏற்றவராகவே எப்போதும் அவர் இருந்துவருகிறார். இந்நிலையில் அவர் தற்போது 80 கிலோ எடையை தூக்கி ரேக் புல் இழுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
80 கிலோ எடையை தூக்கி வொர்க் அவுட் செய்திருக்கும் நடிகை திஷா பதானியின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கடும் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர். மேலும் எப்படி அலட்டிக் கொள்ளாமல் இதை செய்தீர்கள் என்று பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். நடிகை திஷா பதானியின் இந்த வீடியோவிற்கு 33 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்குகள் குவிந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கரண் ஜோஹர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இவர் இணைந்து நடித்திருக்கும் “யோதா“ திரைப்படம் முடிவடைந்திருக்கும் நிலையில் தற்போது “ஏக் வில்லன் 2“ திரைப்படத்தில் இவர் நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com