கண்ணாடி கூண்டிற்குள் ‘கங்குவா‘ நாயகி… கவர்ச்சி புகைப்படத்தால் திணறும் நெட்டிசன்ஸ்!

  • IndiaGlitz, [Tuesday,May 30 2023]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் பாலிவுட் நடிகை கண்ணாடி கூண்டிற்குள் இருந்தவாறு போட்டோஷுட் நடத்தியுள்ளார். அதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை திஷா பதானி தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். ‘பாகி’, ‘குங்ஃபூ யோகா‘ போன்ற பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்த இவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை திஷா பதானி அவ்வபோது தனது பிகினி புகைப்படங்களையும் கவர்ச்சிப் புகைப்படங்களையும் அதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கண்ணாடி கூண்டிற்குள் இருந்தவாறு கறுப்பு உடையணிந்து கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் திணறிவிட்டதாகக் கமெண்ட்ஸ்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘கங்குவா’ திரைப்படம் வரலாற்று காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் ஃபேண்டசி திரைப்படமாகவும் 10 மொழிகளில் 3 டி அனிமேஷனில் உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் பாலிவுட் நடிகை திஷா பதானி இந்தத் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார். அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது குறித்தும் ரசிகர்கள் ஆர்வத்தை வெளியிட்டு வரும் நிலையில் அவருடைய கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

More News

மஹி ராக்ஸ்டார்… கத்தியபடியே சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடிய பாலிவுட் பிரபலம்… வைரல் வீடியோ!

மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது

பாடகி சுவேதா மோகனா இவர்? கலக்கலான போட்டோ ஷுட்டை பார்த்து வியந்த ரசிகர்கள்!

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி சினிமாக்களில் பின்னணி பாடகியாக இருந்துவரும் பாடகி ஒருவர் நடிகைகளைப் போன்று அசத்தலாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்

நீண்ட முடி, தாடி, மீசையுடன்… வைரலாகும் நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்‘ கெட்டப் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ் புதிய திரைப்படத்திற்காக தனது தோற்றத்தையே முழுமையாக மாற்றியுள்ளார்.

தோனி மனைவியுடன் செல்பி.. சிஎஸ்கே தான் என் லைஃப்.. விக்னேஷ் சிவனின் அசத்தல் பதிவு..!

தல தோனி மனைவி சாக்‌ஷி தோனியுடன் செல்பி எடுத்துக் கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் 'சிஎஸ்கே தான் தனது லைஃப் என்றும், மறக்க முடியாத நிகழ்வு என்றும், எங்கு பார்த்தாலும் யெல்லோ தான் என்றும்

உதயநிதி அறக்கட்டளைக்கு எவ்வித அசையா சொத்தும் இல்லை: அறக்கட்டளை அறங்காவலர் பாபு விளக்கம்..!

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் அமலாக்க துறையால் முடக்கப்பட்டது என்று ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அந்த அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு