அம்மா, அப்பா, அக்கா, தம்பி.. குடும்பத்துடன் திஷா பதானியின் கொண்டாட்டம்.. என்ன விசேஷம்?

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வரும் திஷா பதானி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அப்பா, அம்மா, சகோதரி மற்றும் சகோதரருடன் இருக்கும் இந்த புகைப்படத்தை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

திஷா பதானியின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி ஆவார். அவருடைய தாயார் ஒரு சுகாதாரத்துறை அதிகாரி. திஷாவின் சகோதரி குஷ்பு பதானி இந்திய ராணுவத்தில் அதிகாரியாக உள்ளார். அவருடைய இளைய சகோதரர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான திஷா பதானி, ’எம் எஸ் தோனி’ வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் சூர்யாவின் ’கங்குவா’ பிரபாஸின் 'புரொஜக்ட் கே’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திஷாவின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.