ரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' குறித்து டிஸ்கவரி வெளியிட்ட அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டிஸ்கவரி சேனல் தயாரிப்பில் பேரிகிரில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஆவணப்படம் குறித்து சற்றுமுன் டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு:

அகில உலக அளவில்‌ புகழ்‌ பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம்‌, சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில்‌ ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்கிற நிகழ்ச்சி மிகவும்‌ பிரபலமான ஒன்று. இதில்‌ பியர் கிரில்ஸ் என்னும்‌ சாகச வீரர்‌, மயிர்‌ கூச்செறியும்‌ அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும்‌, விலங்குகளுக்கு மத்தியிலும்‌ செய்து, உலக முக்கிய பிரமுகர்களிடம்‌ பேட்டி கண்டு நிகழ்ச்சியை நடத்துவார்‌. இதுவரை இந்த நிகழ்ச்சியில்‌ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட்‌ நடிகைகள்‌ ஜூலியா ராபர்ட்ஸ்‌, கேட்‌ வின்ஸ்லெட்‌ ,டென்னிஸ்‌ வீரர்‌ ராஜர்‌ பெடரர்‌ , மற்றும்‌ சென்ற வருடம்‌ நமது பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி ஆகியோர்‌ பங்கேற்றுள்ளனர்‌ .

பிரதமர்‌ மோடியுடன்‌ நடந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில்‌ பெரும்‌ வரவேற்பை பெற்றது. உத்தரகாண்டில்‌ உள்ள ஜிம்‌ கார்பெட்‌ தேசிய சரணாலயத்தில்‌ இந்நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. இந்த சாகச பயணம்‌ உலகெங்கிலும்‌ பேசப்பட்டது.

இப்போது இந்த நிகழ்ச்சி புதிய வடிவில்‌ Into the Wild with Bear Grylls என்ற தலைப்பில்‌ சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ கர்நாடகாவில்‌ உள்ள பாந்திப்பூர்‌ காடுகளில்‌ படமாக்கப்பட்டுள்ளது. இது ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ பங்கு பெரும்‌ முதல்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்‌. அவரை திரையில்‌ அறிமுகப்படுத்திய இயக்குனர்‌ சிகரம்‌ கே பாலச்சந்தரின்‌ கவிதாலயா நிறுவனம்‌ சின்ன திரைக்கு அவரை முதன்‌ முதலாக டிஸ்கவரி தொலைக்காட்சி சார்பாக அழைத்து வருவதில்‌ பெருமை கொள்கிறது .

ஆபத்துகள்‌ நிறைந்த வனப்பகுதிகளில்‌ இயற்கையோடு ஒட்டி உயிர்‌ வாழும்‌ முறைகளை உணர்த்தும்‌ வகையில்‌ நம்‌ சூப்பர்ஸ்டார்‌ இந்த நிகழ்ச்சியில்‌ பங்கு பெற்றுள்ளார்‌ . நீர்‌ வளத்தின்‌ பாதுகாப்பை பற்றி புரிய வைக்கிறார்‌. டிஸ்கவரி குழுமத்தின்‌ நிர்வாக இயக்குனர்‌ மேகா டாடா கூறுகையில்‌ பியர் கிரில்ஸ் மற்றும்‌ சூப்பர்ஸ்டார்‌ இணைந்து செய்யும்‌ சாகசங்கள்‌ கண்களுக்கு விருந்தாக அமையும்‌ என்று உறுதி கூறுகிறார்‌ .

Bear Grylls கூறுகையில்‌ ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன்‌ இந்திய துணைக்கண்டம்‌ அழைக்கிறது. அவருடைய எளிமை, பொறுமை, பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன்‌. அவரை ஒரு உன்னத மனிதராகவும்‌ நான்‌ பார்க்கிறேன்‌”.

More News

ரோஹித்தின் இரண்டு சிக்ஸர்களை நம்பவே முடியவில்லை: பிரபல நடிகர் டுவீட்

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் எதிர்பாராத வெற்றி குறித்து பிரபல நடிகர் தனது டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார்.

குழந்தைகள் ஆபாச படவிவகாரம்: சென்னை இளைஞர் அதிரடி கைது!

குழந்தைகள் ஆபாசப் படத்தைப் பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்

LKG-க்கே தேர்வு நடக்கிறது.. சிறப்பு பயிற்சி கொடுங்கள்..! பொதுத் தேர்வு கேள்விக்கு செங்கோட்டையன் பதில்.

எல்கேஜிக்கே நுழைவுத் தேர்வு எனும்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தக் கூடாதா? ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயர பொதுத் தேர்வு அவசியம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க 8 வழிமுறைகள்-  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சந்தோஷமாக ரிப்பன் வெட்டி.. குத்து விளக்கேற்றி.. கரோனா வைரசுக்கு தனி வார்டு திறப்பு..! எங்கு தெரியுமா?!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 'கரோனா' வைரஸ் சிறப்பு வார்டு, கோலமிடப்பட்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.