டிஸ்கவரி சேனல் வெளியிட்ட ரஜினி பாடல்: இணையத்தில் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் டிஸ்கவரி சேனல் தயாரித்த ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள காடுகளில் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த ஆவணப்படம் வரும் 23ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த ஆவணப்படத்தை ரஜினி ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ பாடல் ஒன்றை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது. அதில் சிறுவர்கள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அட்டகாசமாக ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளன. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த பாடலின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆட்டம் போட வைக்கும் பாடல் வரிகளும் அதற்கேற்ப ஆடும் நடனங்களும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ரஜினி ரசிகர்களை இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
A mass celebration, all over the nation! Join the party by taking the challenge. Download the song from https://t.co/lBNnSD1T84 and share your dance moves with #ThalaivaOnDiscovery. Tune in to the show on 23 March at 8 PM. @BearGrylls @Rajinikanth
— Discovery Channel IN (@DiscoveryIN) March 6, 2020
Co-powered by: @pharmeasyapp pic.twitter.com/dgzquHWAyu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments