பெரம்பலூரில் டைனோசர் முட்டை??? ஆர்வத்தைத் தூண்டும் சுவாரசியத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரம்பலூர் பகுதியில் டைனோசர் முட்டை அளவிற்கு பெரிதான சில படிமங்கள் கிடைத்து இருக்கின்றன. இந்த படிமங்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது, என்ன வகையான படிமம் என்பதைக் குறித்து தற்போது பலரும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு பின்புறம் இருக்கும் ஓடை பகுதியில் சுமார் 5 மீட்டர் நீளமுள்ள கல்மரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கல்மரமானது சுண்ணாம்பு பாறைகளினால் மூடப்பட்டு முழுவதும் புதைத்து கிடக்கும் நிலையில் மேற்புறம் மட்டும் வெளியே தெரிகிறது.
கடந்த 12 அல்லது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்தான் டைனோசர். இவை தென் அமெரிக்க மண்டலக் காடுகளில் வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்களை முன்னமே நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள டைனோசர் முட்டை படிமங்கள் மாமிச கார்னோட்டார்ஸ் அல்லது இலைகளை மட்டுமே உண்டு வாழும் சைவ சவுரபோட் டைனோசர் வகையைச் சார்ந்தவையாக இருக்கலாம் எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த வித்தியாசமான விலங்கினம் அசாதாரணமான உடல் குணங்களை கொண்டிருந்த போதிலும் அவை ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்டதாக வாழ்ந்து இருக்கிறது. எனவே அதன் வேகம் மற்றும் சுறுசுறுப்பு பல கோடி கணக்கான ஆண்டுகளைத் தாண்டியும் மனிதர்களை வியக்க வைத்திருக்கிறது. 1.5 டன் எடையும் சுமார் 30 அடி நீளமும் கொண்ட இந்த உயிரினம் பெரிய கால் தசைகள் கொண்டதாகவும் மிகவும் திறமையாக வேட்டையாடும் குணம் கொண்டதாகவும் இருந்ததாக விஞ்ஞானிகள் கணக்கிட்டு உள்ளனர். அதை வைத்தே பின்னாட்களில் பல பிரபலமான படங்களும் கார்டூன் சித்திரங்கள் வரையப்பட்டு வருகிறது.
தற்போது குன்னம் அடுத்த ஓடைப் பகுதியில் சிறு சிறு மரக்கிளைகள் போன்ற அமைப்புடைய சில படிமங்களும் கிடைத்து இருக்கிறது. இதைப்போன்ற படிமங்கள் சாத்தனூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 1940 ஆம் ஆண்டு எம்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆய்வாளர் அதை பதிவு செய்து இருந்தார். தற்போது குன்னம் பகுதியிலும் அதே போன்ற படிமங்கள் கிடைக்கப் பெற்று இருப்பது குறித்து பலரும் வியப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஆலத்தூர் எனும் பகுதியிலும் இதேபோன்ற சில படிமங்களை சில வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து இருந்தனர். அதையொட்டி குன்னத்தில் டைனோசர் முட்டை அளவிற்கு பெரிய பெரிய முட்டை போன்ற படிமங்களும் சிறு சிறு கிளைகள் போன்று இருக்கும் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனவே புவியியல் ஆய்வாளர்கள் இதை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்த குன்னம் பகுதியில் அம்மோனைட் வகையிலான சில கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடல்வாழ் உயிரினங்களின் தடம் இங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் ஒருவேளை முட்டை போன்று இருக்கும் படிமம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த உயிரினத்தின் சுவடுகளாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் முட்டை போன்று இருக்கும் படிமத்தையும் சிறுசிறு கிளைகள் கொண்ட படிமத்தையும் அப்பகுதியின் வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றி சேகரித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படிமங்கள் கிடைக்கப்பட்ட பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments