மவுனம் கலைத்த மெலானியா… டிரம்புக்கு எதிராக அவர் கொடுத்த முதல் குரல்?

அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாகத் தேர்தல் முடிந்தும் வன்முறை, கலவரங்கள் போன்ற சம்பவம் ஏற்பட்டு நாடு முழுவதும் மக்கள் குழப்பம் அடைந்து உள்ளனர். காரணம் அமெரிக்காவின் 45 ஆவது அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார். இதையடுத்து அவருக்கு எதிராக கண்டன குரல்கள் ஒலித்தன. மேலும் அவருக்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி அவரை பதவி நீக்கம் செய்ய ஜனநாயகக் கட்சியினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கான நாடாளுமன்றக் கூட்டம் கடந்த புதன்கிழமை அன்று கூடியது. அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே பல ஆயிரக்கணக்கான டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி கோஷம் எழுப்பினர். இதனால் வன்முறை, கலவரம் வெடித்தது. இதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழக்கவும் நேரிட்டது. இந்தக் கலவரத்திற்கு டிரம்ப்பின் தூண்டுதல்தான் காரணம் என்று பலரும் கருத்துக் கூறியுள்ளனர். இதையடுத்து பல உலக நாடுகளின் தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மேலும் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வன்முறையைத் தூண்டுமாறு பல்வேறு கருத்துகளை வெளியிட்டார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அன்று ஒரு நாள் இரவு முழுவதும் அவருடைய பேஸ்புக் அக்கவுண்ட் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் டிவிட்டர் கணக்கு வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்படுவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்ததோடு அதை நிறுத்தியும் வைத்தது. இப்படி சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் டொனால்ட் டிரம்ப்பிற்கு அந்நாட்டின் சபாநாயகர் நான்ஸி பெலோஸியும் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறார்.

இந்நிலையில் முதல் முறையாக அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப் தன்னுடைய கணவருக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். அதில் அமெரிக்காவில் நடந்த வன்முறை சம்பவம் தன் மனதை மிகவும் வருத்தப்படுத்தியதாகக் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட அவர் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து தன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் மிகவும் இழிவாக பேசப்பட்டதாகவும் கூறினார். மேலும் இந்தச் சம்பவத்தை சொந்த லாபத்திற்காக யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் விளக்கம் அளித்து உள்ளார்.

More News

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் பத்து மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பெற்றோர்களுடனான கருத்து கணிப்புகளுக்கு

1,000 பெண்கள் புடைசூழ இருக்கும் சாமியாருக்கு 1,000 ஆண்டுகள் சிறை தண்டனை!!! வைரல் சம்பவம்!!!

துருக்கி நாட்டின் மதத்தலைவர் ஒருவருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் அதிரடியாக 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது.

'மாஸ்டர்' லீக் காட்சிகள்: படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இன்று ஒரு சில இணையதளங்களில் 'மாஸ்டர்' படக்காட்சிகள் சில லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

நிஷாவிடம் கண்ணீர் சிந்திய ஆரி கூறியது என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவடையும் தருணம் வந்துவிட்ட நிலையில் இன்று சிறப்பு விருந்தினர்களாக எவிக்ட் ஆன அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர் வந்திருந்தனர் என்ற

பாலாஜிக்கு முழுதாய் சப்போர்ட் செய்த மீராமிதுன்: கொஞ்சநஞ்ச ரசிகர்களையும் குறைக்கும் முயற்சியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் கிட்டத்தட்ட ஆரி தான் என்று ரசிகர்களால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், 'பாலாஜிதான் ரியல் வின்னர்