10 வருடத்தில் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய 'சூப்பர்' இயக்குனரின் 3வது படம்!

  • IndiaGlitz, [Monday,May 31 2021]

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய சூப்பர் ஹிட் பட இயக்குனர் தனது மூன்றாவது படத்தை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு ’ஆரண்யகாண்டம்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கினார். இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குனர் ஆகிய தேசிய விருதுகளை வென்றது.

இந்த நிலையில் ’ஆரண்யகாண்டம்’ வெளியாகி எட்டு ஆண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ’சூப்பர் டீலக்ஸ்’ படம் வெளியானது. இந்த படம் சூப்பர் வெற்றி பெற்ற நிலையில் விஜய்சேதுபதிக்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 10 ஆண்டுகளில் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தற்போது மூன்றாவது படத்திற்காக தயாராகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருடைய மூன்றாவது படம் சயின்ஸ் ஃபிக்சன் கதையம்சம் கொண்டது என்றும் கதை திரைக்கதை எழுதும் பணிகள் முடிந்து விட்டதாகவும் லாக்டவுன் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

More News

ஆண் நண்பருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்திய சினிமா பிரபலம் தற்கொலை!

ஆண் நண்பருடன் லிவ்விங் டு வாழ்க்கை நடத்திய சினிமா பிரபலம் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விஷாலுக்கு பயந்து எந்த நடிகை ஓடினார்? காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்!

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய நடிகர் விஷால் இத்தகைய கொடூரங்களை செய்யும் ஆசிரியர்களை தூக்கில் போடவேண்டும் என்று காரசாரமாக தெரிவித்திருந்தார்.

மிக மோசமான கண்டுபிடிப்பு, ஸ்லோ பாய்சன்: கமல், யுவன்சங்கர் ராஜா கருத்து!

மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் மோசமானது என்று கமல்ஹாசனும் உடம்பிற்கு ஸ்லோ பாய்சன் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் அடுத்தடுத்து தங்கள்

வாழ்க்கையில் இந்த கனவு மட்டும் நடக்கவே இல்லை… வருந்தும் சச்சின்!

இந்தியக் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

கொரோனா- ஆயுர்வேத மருந்துக்கு திடீர் ஒப்புதல் அளித்த ஆந்திர அரசு… என்ன காரணம்?

ஆந்திரமாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுப்பதாகவும் அந்த மருந்தை சாப்பிட்ட தீவிர கொரோனா