சன்னிலியோனை வைத்து இயக்குனர் போட்ட திட்டம் நடக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக சன்னிலியோனை ’ஓ மை கோஸ்ட்’ படத்தின் இயக்குனர் யுவன், சொந்தக்குரலில் டப்பிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சன்னிலியோன் நடிப்பில் உருவான ’ ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தை யுவன் இயக்கி இருக்கிறார் என்பதும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் தெரிந்ததே.
சதீஷ், தர்ஷா குப்தா முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் சன்னி லியோன் ராணி வேடத்தில் நடித்திருக்கின்றார் என்பதும், இந்த படத்தில் நாயகன் மற்றும் வில்லன் ஆகிய இரண்டும் கலந்த ஒரு கேரக்டர் என்றும் இயக்குனர் யுவன் தெரிவித்துள்ளார் .
மேலும் சன்னி லியோன் இந்த கேரக்டரை நன்றாக உள்வாங்கி கொண்டதாகவும், அவருக்காகவே தமிழ் பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், தற்போது சன்னிலியோன் ஓரளவுக்கு தமிழ் பேசுகிறார் என்றும் தெரிவித்த இயக்குனர் யுவன், சன்னிலியோனை இந்த படத்தில் சொந்தக்குரலில் தமிழில் டப்பிங் பேச வைக்கவும் நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என்றும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார் .
இந்த படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார் என்பதும் தீபக் மேனன் ஒளிப்பதிவில் அருண் சித்தார்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீசாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments