ஒரே நேரத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும் பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் இசை மேதைகளான இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆகிய இரண்டு இசையமைப்பாளர்களுடன் பிரபல இயக்குனர் ஒருவர் பணிபுரிந்து வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தற்போது ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். உலகிலேயே சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் பெறுகிறது. இந்த படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும் அவரது இசையமைப்பு குறித்து கடந்த சில நாட்களாக தனது டுவிட்டரில் பார்த்திபன் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பார்த்திபன் இயக்கத்தில் அவர் மட்டுமே நடித்த ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அபிஷேக்பச்சன் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா பின்னணி இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக இசைஞானி பின்னணி இசை அமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பார்த்திபன் கூறியிருப்பதாவது: ஹிந்தியின் பின்னணி இசை கோர்ப்பில். மறுபுறம் ARR-ரின் இசையில்’இரவின் நிழல்’. இசைபட வாழ்தல் அர்த்தப்பட.. புகழ் விற்று பொருள் ஈட்டாமல்,இன்னும் பெற உழைப்பதன் பெருமை காண்கிறேன். Oscar nominations அறிவித்த போது உச்சரிக்கப்பட்ட பெயர்களின் உச்சபட்ச உற்சாகம் ரூபாய்,டாலர்,பவுண்டில் அடங்காது.
ஒரே நேரத்தில் ’ஒத்த செருப்பு’ படத்தின் இந்தி பதிப்பில் இளையராஜாவுடனும், ‘இரவின் நிழல்’ படத்திற்காக ஏ ஆர் ரஹ்மானுடனும் இயக்குனர் பார்த்திபன் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியின் பின்னணி இசை கோர்ப்பில்.மறுபுறம் ARR-ரின் இசையில்’இரவின் நிழல்’.இசைபட வாழ்தல் அர்த்தப்பட..
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 9, 2022
புகழ் விற்று பொருள் ஈட்டாமல்,இன்னும் பெற உழைப்பதன் பெருமை காண்கிறேன்.Oscar nominations அறிவித்த போது உச்சரிக்கப்பட்ட பெயர்களின் உச்சபட்ச உற்சாகம் ரூபாய்,டாலர்,பவுண்டில் அடங்காது pic.twitter.com/ie3gnzNUru
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments