மிக விரைவில் நல்ல செய்தி: அஜித்தின் 'பில்லா' இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,December 14 2017]

தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய 'பில்லா' திரைப்படத்தின் 10வது ஆண்டு விழா இன்று அஜித் ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றான இந்த படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் ஆனதை அடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் குறித்து ஒரு பதிவை செய்துள்ளார்


பில்லாவின் பத்து ஆண்டுகள். காலம் மிக வேகமாக உருண்டோடினாலும் இந்த படத்தின் நினைவுகள் மட்டும் நெஞ்சை விட்டு அகலவில்லை. இந்த படத்தின் நினைவுகள் இன்னும் புத்துணர்ச்சியாக என் மனதில் உள்ளது. அஜித்துடன் நான் இணைந்த முதல் படம். அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த நேரத்தில் அஜித் ரசிகர்களுக்கும், இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றி

ஒரு மிகப்பெரிய திட்டம் மனதில் உள்ளது. விரைவில் அந்த திட்டத்தை நல்ல செய்தியாக அறிவிக்கின்றேன்' என்றும் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார். விஷ்ணுவர்தனின் அந்த திட்டத்தின் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.