திருமணம் ஆகி ஒன்றரை வருடத்தில் விவாகரத்து கோரும் நடிகர் கிருஷ்ணா

  • IndiaGlitz, [Thursday,July 02 2015]

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகரும், பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான கிருஷ்ணா தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அலிபாபா, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகர் கிருஷ்ணாவுக்கும், ஹேமலதா என்ற பெண்ணிற்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையுலகினர்களின் முன்னிலையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. திருமணம் ஆகி ஒன்றரை வருடம் கூட முடியாத நிலையில் நடிகர் கிருஷ்ணா தற்போது விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

தனது மனைவி தன் மீது அடிக்கடி சந்தேகப்படுவதாகவும், இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், கிருஷ்ணா தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து தாமதமாக வீட்டிற்கு வரும்போது வீட்டின் கதவை திறக்காமல் தனது மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும், இதனால் பல நாட்கள் தனது நண்பர்களின் வீட்டில் தங்கியதாகவும் கிருஷ்ணா தரப்பில் இருந்து கூறப்படுகிறது.