'தல 57' படத்தை இயக்கும் சூர்யா இயக்குனர்?

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

தல அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அல்லது நாளை முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12 மணிக்கும், நவம்பர் 5ஆம் தேதி படமும் வெளிவரும் என்று கூறப்படும் நிலையில் அஜீத்தின் அடுத்த படம் குறித்த செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.

'தல 57' படத்தை சத்யஜோதி நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இந்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவருகின்றது. விஷ்ணுவர்தன், கே.வி.ஆனந்த், உள்பட பல இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இயக்குனர் விக்ரம் குமார் பெயரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

தற்போது இயக்குனர் விக்ரம்குமார், சூர்யாவின் '24' படத்தின் பணிகளில் பிசியாக இருப்பதாகவும், இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் அவர் அஜீத்தின் 57வது படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. விக்ரம்குமார் ஏற்கனவே 'யாவரும் நலம்', 'மனம்' போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இசைஞானியுடன் இணைவாரா இமான்?

1000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து உலக சாதனை செய்துள்ள இசைஞானி இளையராஜா...

அஜீத்துடன் மீண்டும் இணையும் 'வீரம்' நடிகர்

அஜீத், திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, சமையல் என பல்வேறு திறமைகளை உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே...

விஜய் 59' டப்பிங் பணியில் பிரபல இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,....

ரஜினியின் 'கபாலி'யில் இணைந்த ஆம்புலன்ஸ் டிரைவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில்,...

இன்று நள்ளிரவு அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே ...