close
Choose your channels

சாதி பிரிவினையை அலசும் சூர்யாவின் அடுத்த படம்!

Sunday, March 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா தற்போது 'என்.ஜி.கே' படத்தில் நடித்து முடித்து 'காப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து 'இறுதிச்சுற்று' சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் அவருடைய 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படங்களில் ஒன்றான 'உறியடி 2' திரைப்படம் சாதிப்பிரிவினையை அலசும் படம் என அப்படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான விஜய்குமார் தெரிவித்துள்ளார். 'உறியடி 2' குறித்து அவர் மேலும் கூறியதாவது:

எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. 'Of all the arts, for us cinema is the most important'னு லெனின் சொல்லியிருக்கார். 'கலைகளில் சினிமா தான் பெருசு'ன்னு ஒரு கலைஞன் சொல்லியிருந்தா, அது தற்பெருமைன்னு சொல்லலாம். ஆனா இதைச் சொன்னவர் மாபெரும் புரட்சியாளர். சரி தவற்றைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதே சமயம் எனக்குள்ளே இருக்கிற படைப்பாளியைத் திருப்திப் படுத்தணும்." என்றார்.

"2டி ராஜசேகர் சாரை ஒருநாள் சந்திச்சேன். அப்போ உறியடி 2 கதையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவருக்கு அது பிடிச்சிருந்தது. உடனடியா முழுக்கதையையும் கேட்டார். கதையின் முதல் வெர்ஷனைச் சொன்னேன். அப்புறம் சூர்யா சாரைப் பார்த்தேன். அப்போ கதையை வலுப்படுத்தி அடுத்த வெர்ஷனைச் சொன்னேன். ஒருசில கேள்விகள் கேட்டார். " எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, கண்டிப்பா படம் பண்ணலாம்"னு சொன்னதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. காரணம் உறியடி பட ரிலீஸ்ல ஏகப்பட்ட பிரச்சனைகள். பொருளாதார இழப்பை விட மனவலி அதிகமா இருந்தது. "உறியடி2" படத்துக்கு இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கிடைச்சது நிம்மதியா இருக்கு. சூர்யா சாரும் ஒரு படைப்பாளிக்கு என்ன சுதந்திரம் கொடுக்கணுமோ, அதை எனக்குக் கொடுத்தார். ஷுட்டிங் முடியுற வரைக்கும் எந்தவிதமான பிரஷரும் இல்லாம முடிச்சிட்டோம். படம் சம்மர் ரிலீஸ்" .

இந்தப்படம் முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடித்திருக்கிறார்கள். கூடவே யூட்யூப் மூலம் பலருக்கும் பரிச்சயமான மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகர் நடித்திருக்கிறார். உறியடியில் பணிபுரிந்த டெக்னிக்கல் டீம் அனைவரும் இதிலும் ஒன்றிணைந்துள்ளார்கள். அசுரவதம் படத்தில் தன் அசுரபலத்தைக் காட்டி, 96 படம் மூலமாக இன்ப ராகம் ஊட்டிய கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

இவ்வாறு விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment