மது, சிகரெட் மட்டுமின்றி இதற்கும் வார்னிங் வேண்டும்: இயக்குனர் விஜய்ஸ்ரீ கோரிக்கை
- IndiaGlitz, [Tuesday,October 06 2020]
உலகின் மிக வயதான ஹீரோ என்ற பெருமையை பெற்ற சாருஹாசன் நடித்த ’தாதா 87’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் விஜய்ஸ்ரீ. இவர் தற்போது ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த படத்தை சென்சாருக்கு விண்ணப்பித்தபோது சென்சார் அதிகாரிகளிடம் வேண்டுகோள் ஒன்றை இயக்குனர் விஜய்ஸ்ரீ வைத்துள்ளாராம். சிகரெட் மது ஆகிய காட்சிகளின்போது போடும் வார்னிங் ஸ்லைடை, பாலியல் வன்கொடுமை காட்சிகள் வரும்போது போட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மேலதிகாரிகளின் ஆலோசனை பெறுவதாக சென்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் தனது படத்தில் ஐந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவரை பெட்ரோல் ஊற்றி எரித்தது போன்ற காட்சி ஒன்றை படமாக்கியதாகவும், அதன் பின்னர் சில மாதங்களில் ஐதராபாத்தில் அதே போன்ற சம்பவம் நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார். சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மீடியா என்பதால் அதில் பதிவு செய்யும் காட்சிகள் மக்களை விரைவில் சென்றடையும் என்றும் அதனால் பாலியல் வன்கொடுமை காட்சிகளின் போது கண்டிப்பாக வார்னிங் ஸ்லைட் போட வேண்டும் என்றும் அவர் சென்சார் போர்டுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை சென்சார் அதிகாரிகள் ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ஏற்கனவே இயக்குனர் விஜய்ஸ்ரீ தனது ‘தாதா’ படத்தில் ‘பெண்களை அனுமதியின்ரி தொடுவது சட்டப்படி குற்றமாகும் என்ற வார்னிங் ஸ்லைடை பதிவு செய்துள்ளார். இது அனைத்து படங்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கை ஆகும்,