பிரதமர் மோடிக்கு தமிழ் இயக்குனரின் வேண்டுகோள் கடிதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று முன் தினம் மத்திய அரசு கோல்டன் ஐகான் விருது அறிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினர் இந்த விருதில் உள்நோக்கம் இருப்பதாகவும், இந்த விருது கமல்ஹாசன், மோகன்லால் போன்றவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்றும், ஏற்கனவே இதே விருதை பெற்ற ரஜினிக்கு மீண்டும் இந்த விருதை அறிவித்தது ஏன் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விஜய்ஸ்ரீ, இதுகுறித்து பிரதமர் மோடி அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு,
1975ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான துப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார். நேற்று அவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்” விருது மத்திய அரசு அறிவித்ததில்
மிகவும் மகிழ்ச்சி. இந்த தருணத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உதிரிப்பூக்கள் படத்தின் மூலம் அறிமுகமான திரு சாருஹாசன் அவர்கள் முதுமையில் தனது 90 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்திய நடிகர்களிலேயே வயதான நடிகர் என்ற சாதனையையும் வைத்திருப்பவர்.1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய ” தபெரனா கதெ ” என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். மேலும் சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருதும் பெற்றுள்ளார்.
உலக அளவில் பார்க்கும் போதும், 90 வயதில் தற்சமயம் இவர் தான் நடித்து வருகிறார். இந்திய நடிகரின் இந்த சாதனையை உலகம் அறிய செய்ய வேண்டும். சாருஹாசன் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கிட வேண்டும் என்பதே என்னைப் போன்ற சினிமா ஆர்வலர்களின் அன்பான வேண்டுகோள்’ என்று கூறியுள்ளார். இவரது வேண்டுகோளை பிரதமர் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Request to Honourable Narendramodi#PrimeMinisternarendramodi #PrakashJavdekar #Rajinikanth @narendramodi @PrakashJavdekar @rajinikanth @KamalaHarris #charuhasan @onlynikil @OnlyGmedia pic.twitter.com/T5wNTktxML
— Vijay Sri G (@vijaysrig) November 4, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com