இயக்குனர் விஜய் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’கிரீடம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் ’மதராசப்பட்டினம்’ ’தெய்வத்திருமகள்’ ’தலைவா’ ’சைவம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கலந்து 2019ஆம் ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார் என்பதும், விஜய்-ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு 2020ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த குழந்தைக்கு ’துருவா’ என்று விஜய்-ஐஸ்வர்யா தம்பதியினர் பெயர் வைத்தனர். இந்தநிலையில் நேற்று விஜய்-ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் குழந்தை துருவாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இயக்குனர் விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments