முதல்முறையாக ஜி.வி.பிரகாஷ் இல்லாத விஜய் படம்

  • IndiaGlitz, [Monday,July 11 2016]

பிரபல கோலிவுட் இயக்குனர் .விஜய் இயக்கிய முதல் படமான 'கிரீடம்' படத்தில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் முதல்முறையாக விஜய் படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். அந்த படம்தான் ஜெயம் ரவி நடிப்பில் விஜய் இயக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள 'தேவி எல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய் அடுத்தபடத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார். ஜெயம் ரவி வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ள இந்த படம் 'போகன்' படம் முடிவடைந்த பின்னர் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஹாரீஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படம் ஹாரீஸ் இசையமைக்கும் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 'மின்னலே' திரைப்படம்தான் ஹாரீஸ் ஜெயராஜின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 ஆண்டுகளாக இசையமைத்து வரும் ஹாரீஸ் தற்போது 50வது படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது