இயக்குனர் விஜய் -பிரபுதேவா படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 21 2018]

பிரபல இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்கிய 'தேவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடித்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்த முந்தைய படத்திற்கு 'தேவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'லக்ஷ்மி' என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிகின்றார்.

More News

அரசியலிலும் உங்கள் சாதனை தொடரட்டும்: கமலுக்கு பிரபல நடிகர் பாராட்டு

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். இன்று மாலை 6 மணிக்கு அவர் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கின்றார்

ப்ரியாவாரியர் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புருவ நடனம் மற்றும் கண் சிமிட்டல் மூலம் ஒருசில நாட்களில் இணைய உலகத்தின் உச்சகட்ட புகழை பெற்றுவிட்ட மலையாள நடிகை பிரியாவாரியருக்கு கண்திருஷ்டி போல் அவர் மீது ஒருசில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன,.

பேஸ்புக் மார்க் ஜுகர்பெர்கை பின்னுக்கு தள்ளிய பிரியாவாரியர்

கடந்த சில நாட்களாக இணையதளங்களின் வைரல் பிரியாவாரியர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது புருவ நடனமும் ஒரே ஒரு கண் சிமிட்டலும் லட்சக்கணக்கான இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.

கமல் யாருக்கும் உதவாத ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை: அமைச்சர் ஜெயகுமார்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது முதல் அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.

லிப் டு லிப் புகைப்படத்தை ஏன் நீக்க வேண்டும்: கோஹ்லிக்கு ரசிகர்கள் கேள்வி

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடந்தது