மாற்றத்தை உண்மையிலேயே விரும்பினால் கமலுக்கு ஆதரவு கொடுங்கள்: ரஜினிக்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்

ரஜினிகாந்த் உண்மையிலேயே தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்பினால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என பிரபல இயக்குனர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தனது உடல்நிலையை காரணம் காட்டி ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் இந்த முடிவை எடுத்ததற்காக ரசிகர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவாக அறிவித்தார்.

ரஜினியின் இந்த திடீர் முடிவு குறித்து பல்வேறு திரையுலக பிரமுகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது: தைரியமான முடிவு ரஜினிகாந்த் சார். உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள். உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால் உங்கள் ஆதரவை வெளிப்படையாக மக்கள் நீதி மய்யத்துக்கு அறிவியுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்காததால் அவரது 40 ஆண்டுகால நண்பர் கமல்ஹாசனின் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.