close
Choose your channels

தமிழ் சினிமாவில் இன்னொரு ஸ்போர்ட்ஸ் படம்: விஜய்மில்டன் இயக்குகிறார்

Wednesday, June 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் விஜய்மில்டன், 'கோலிசோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை சமீபத்தில் பார்த்தோம். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை அவர் தொடங்கியுள்ளதாகவும் வெகுவிரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் விஜய்மில்டன் 'கோலிசோடா 2' படத்திற்கு முன்னர் இன்னொரு படத்தை இயக்க தயாராகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் பாஸ்கட்பால் விளையாட்டை மையப்படுத்தும் ஒரு கதை என்றும் இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 10ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவிருப்பதாகவும் தெரிகிறது. 'சென்னை 28', 'வல்லினம்', ஈட்டி' படங்களின் வரிசையில் தமிழ் சினிமாவில் இன்னொரு ஸ்போர்ட்ஸ் படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment