புதுவரவு மகனுடன் பிறந்தநாளை கொண்டாடும் அஜீத்-விஜய் பட இயக்குனர்
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
அஜித் நடித்த ’கிரீடம்’, விஜய் நடித்த ’தலைவா’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’தலைவி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது புதுவரவு மகனுடன் மகனுடன் இயக்குனர் விஜய் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இயக்குனர் விஜய் கடந்த ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த மே மாதம் 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.