மீண்டும் இணைந்தது 'தேவி' பட கூட்டணி

  • IndiaGlitz, [Friday,September 22 2017]

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திகில் திரைப்படமான 'தேவி' தமிழ் உள்பட மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் ஒன்றின் பூஜை இன்று சென்னையில் சிறப்பாக நடந்தது.

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் தி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

சி.எஸ். சாம் இசையமைக்க மதன் கார்க்கி பாடல் எழுதுகிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், வெகுவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.