அமைதிக்கு முன் ஒரு புயல்: அஜித்தை வேற லெவலில் வர்ணித்த விக்னேஷ் சிவன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் ’அமைதிக்கு முன் ஒரு புயல்’ என வர்ணித்துள்ளார்.
அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அஜித்தின் 62வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்று முன் புத்தர் சிலைக்கு முன் அஜித் நிற்கும் புகைப்படத்தை பதிவு செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் ’அமைதிக்கு முன் ஒரு புயல்’ என்று குறிப்பிட்டு உள்ளார். புத்தரை அமைதி என்றும் அஜித்தை புயல் என்றும் வர்ணிக்கும் விதமாக விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் புரிந்து கொண்டு அதற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
மொத்தத்தில் ’அஜீத் 62’ படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விக்னேஷ் சிவன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
A Storm before the calm ?????????????????????????????? pic.twitter.com/yhRZufalFP
— Vignesh Shivan (@VigneshShivN) October 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com