எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணிகிட்டு இருக்கேன்: விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கிட்டார் வாசிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இது குறித்து அவர் கூறிய போது, ‘எனக்கு கிட்டார் வாசிக்க எல்லாம் தெரியாது, எப்பொழுதும் டிரம்ஸ் தான் வாசித்துக் கொண்டிருப்பேன். திடீரென புதுசாக ஒரு இன்ஸ்ட்ருமென்ட் எடுத்து வாசிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான் இந்த கிட்டாரை வாங்கி நான் வாசிக்க கற்றுக் கொள்வதற்காக வாங்கி வைத்துள்ளேன். இதை வாசித்து நான் எல்லாரையும் டிஸ்டர்ப் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒரு சின்ன சின்ன விஷயங்கள் இருந்து, அதன்பின் வேலை காரணமாக அதிலிருந்து தூரமாகப் போய் விடுவோம். ஆனால் அந்த சின்ன சின்ன விஷயங்கள் திரும்பி வரும்போது வாழ்க்கை நமக்கு மிகவும் சுவராசியமாக இருக்கும். அந்த மாதிரி ஒரு அனுபவம் தான் இது’ என்று அவர் கூறி உள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.