'கொலையுதிர்க்காலம்' தயாரிப்பாளருக்கு விக்னேஷ்சிவன் அனுப்பிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் புரமோஷன் விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றபோது அந்த விழாவில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டடது. ராதாரவிக்கு பெரும் கண்டனங்கள் குவிந்த நிலையில் அவர் திமுகவில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ராதாரவியின் பேச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன், படக்குழுவினர்களையும் விமர்சனம் செய்தார். இன்னும் படப்பிடிப்பே முடியாத படத்திற்கு புரமோஷனா என அவர் கூறியது படத்தின் வியாபாரத்தை பெருமளவு பாதித்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'கொலையுதிர்க்காலம்' படத்தை தான் பார்த்தபோது அதுவொரு சிறந்த த்ரில்லர் படம் என்பதை உணர்ந்ததாகவும், இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் இந்த படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நயன்தாரா உள்பட படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளதாகவும், சக்ரி டோலட்டியின் இயக்கம் மற்றும் டெக்னிக்கல் குழுவினர்களின் கடுமையான உழைப்பால் இதுவொரு சிறந்த படமாக உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் மதியழகன் ஒரு தரமான படைப்பை உருவாக்கியிருப்பதாக கூறிய விக்னேஷ் சிவன், அதே நேரத்தில் சில தேவையில்லாத, துரதிஷ்டவசமான சம்பவங்கள் தன்னால் நடந்துவிட்டதாகவும், ஆனால் அதன்பின் மதியழகன் அவர்களை நேரில் சந்தித்த பின்னர் அனைத்தும் சரியாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாம் அனைவரும் ஒரே துறையில் இருப்பதால் ஒற்றுமையுடன் பாசிட்டிவ் எண்ணங்களுடன் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டாக தயாரிப்பாளருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
.@VigneshShivN on #KolaiyuthirKaalam which is set to release grand on June 14th. #Nayanthara @MathiyalaganV9 @EtceteraEntert1 pic.twitter.com/LPiJ7zY2mR
— Done Channel (@DoneChannel1) June 10, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments