அஜ்மீர் தர்காவில் விக்னேஷ் சிவன்: பரவி வரும் வதந்தி!

  • IndiaGlitz, [Monday,April 15 2019]

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் 'தர்பார்' படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்று சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த புகைப்படம் அவர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக வதந்தியை கிளப்பியது

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அடுத்த புகைப்படமும் ஒரு புதிய வதந்தியை கிளப்பியுள்ளது. அஜ்மீர் தர்காவில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், 'இந்த இடத்தில் இருக்கும்போது சுப்பர் பவராக இருப்பதாகவும், பாசிட்டிவ் உணர்வுகள் கிடைத்ததாகவும், மனம் நிம்மதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் மதம் மாறிவிட்டதாக ஒருசிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

மேலும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்னொரு புகைப்படத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நயன்தாராவும் இணைந்து தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவது போல் உள்ளது. நல்லவேளையாக இந்த ஒரு புகைப்படத்திற்குத்தான் எந்தவித வதந்தியும் நெட்டிசன்களால் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

More News

 விஜய், விக்ரம் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி

 தளபதி விஜய் நடித்த 'புலி' மற்றும் விக்ரம் நடித்த 'சாமி 2' ஆகிய படங்களை தயாரித்த ஷிபு தமீன் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

டிடிவி தினகரன் வெளியிடும் திரைப்படத்தின் டீசர்!

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி  மக்களவை தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவிருப்பதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளனர்

தட்டிக் கேட்ட தோனிய திட்றாங்க: நோபால் சர்ச்சை குறித்து பிரபல நடிகர்

சமீபத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் ஒரு அம்பயர் நோபால் கொடுக்க, இன்னொரு அம்பயர் நோபால் இல்லை

ராகவா லாரன்ஸின் ஆவேச அறிக்கைக்கு பின் வருத்தம் தெரிவித்த அரசியல் தலைவர்

பிரபல நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் நேற்று பெயர் குறிப்பிடாமல் ஒரு அரசியல் தலைவர் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததில் இருந்தே அணியில் யார் யார் இடம்பெறுவார்கள்