வருங்காலத்தில் திரைப்படங்களே எடுக்க முடியாது: புதிய சட்டம் குறித்து வெற்றிமாறன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ள ஒளிபரப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பூச்சிமுருகன் உள்பட பலரும் தங்களது சமூக வலைதளங்களில் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சற்று முன்னர் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
புதிய ஒளிபரப்பு சட்டத் திருத்த மசோதா குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியபோது, ‘வருங்காலத்தில் நல்ல கருத்து சொல்கிற படங்களை எடுக்கவே முடியாது என்றும் ஒன்றிய அரசின் எண்ணங்களுக்கு ஏற்ப படங்களை எடுக்க வேண்டும் என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், மசோதாவை உடனடியாக திரும்பப் பெறுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திரைப்பட தணிக்கை திருத்த சட்ட மசோதாவுக்கு கருத்துக் கூறும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments