பைக், கார்களுக்கு பதில் வித்தியாசமான பரிசு கொடுத்த வெற்றிமாறன்.. உதவி இயக்குனர்கள் மகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகை பொருத்தவரை ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் பைக், கார் வாங்கி கொடுப்பார் என்பதும் அதேபோல் இயக்குனர் தங்களது உதவி இயக்குனர்களுக்கு பைக் உள்பட ஒரு சில பரிசுகளை வாங்கி கொடுப்பார்கள் என்பது தெரிந்ததே. மேலும் பல நடிகர்கள் தங்களது படக்குழுவினர்களுக்கு தங்கத்தில் மோதிரம் செயின் ஆகியவையும் வாங்கி பரிசாக கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் ’விடுதலை’ திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனது உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் தங்களது உதவி இயக்குனர்கள் 25 பேருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்து உள்ள உத்திரமேரூர் என்ற பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்திருப்பதாகவும் இந்த நிலத்தை எந்த காரணத்தை கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்றும் வீடு கட்டி அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பைக் கார் போன்ற ஆடம்பர பரிசுகள் கொடுக்கும் திரையுலகினர் மத்தியில் வெற்றிமாறன் வித்தியாசமாக நிலம் வாங்கி கொடுத்திருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout