'பிக்பாஸ்' மகத்தை கலாய்த்த இயக்குனர் வெங்கட்பிரபு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத், எப்போதும் பெண் போட்டியாளர்களையே சுற்றிச்சுற்றி வருவதாக முதல் நாள் முதல் குற்றம் சாட்டப்பட்டு வருகிறார். வீட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய ரொமான்ஸில் கருமமே கண்ணாக இருப்பவர் மகத். இதனால் நேற்றைய நிகழ்ச்சியில் மகத்தை பாலாஜி காறித்துப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பாக யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் மகத் விடும் ஜொள்ளுவை பார்த்து பிக்பாஸ் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் வயிற்றெரிச்சல் அடைந்திருப்பது அவர்களது கமெண்ட்டுகளில் இருந்து தெரியவருகிறது.
இந்த நிலையில் நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் 'பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தங்கள் கேர்ள் பிரண்டுகளை மிஸ் பண்றிங்களா? உள்ளே நடந்து கொள்வதை பார்த்தால் அப்படி தெரியலையே என்று கூற அதற்கு இயக்குனர் வெங்கட்பிரபு, 'அதனாலதான் புரோ அவன் அப்படி நடந்துக்குறான்' என்று மகத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி கூறியுள்ளார். இந்த இரண்டு டுவீட்டுக்களுக்கும் டுவிட்டர் பயனாளிகள் சரமாரியாக கமெண்ட் அளித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout