'சென்னை 303' வீரருக்கு 'சென்னை 28' கேப்டன் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணி சென்னை டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்துள்ளது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் மூன்று சதங்கள் அடித்த கருணா நாயர் என்றால் அது மிகையில்லை. இந்நிலையில் முச்சதம் அடித்து சாதனை புரிந்த ரியல் கிரிக்கெட் வீரருக்கு 'சென்னை 28 II' என்ற வெற்றி படத்தை கொடுத்த வெங்கட்பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெங்கட்பிரபு கூறியதாவது:
“சென்னை – 303′ கதாநாயகன் கருண் நாயருக்கு , எங்கள் 'சென்னை 28' அணியின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்…..தன்னுடைய வாழ்க்கையில் பல சவால்களையும் , போட்டிகளையும் சந்தித்து, தன்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார் கருண் நாயர்……எங்களின் சென்னை 28 II படத்தின் வெற்றியும் ஏறக்குறைய அவரை போல தான் இருக்கின்றது…..
மூன்றாவது சதத்தை கருண் நாயர் அடிக்கும் பொழுது, சென்னை சேப்பாக்கம் விளையாட்டு அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது…..அதே போல் விநியோகஸ்தர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் சென்னை 28 II படத்திற்கு கிடைக்கின்ற பாராட்டுகள், எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது…. இந்த டெஸ்ட் தொடரில் ஒரு பிரம்மாண்ட வெற்றியை நம் நாட்டிற்கு தேடி தந்த இளம் வீரர்களை எங்கள் அணியின் சார்பில் மனமார பாராட்டுகிறோம்….நம் இந்திய அணியின் அசத்தலான கேப்டன் விராட் கோலி எப்படியோ அதே மாதிரி தான் எங்கள் அணியின் யுவன்ஷங்கர் ராஜாவும்…. எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் அவருக்கு பக்கபலமாய் செயல்பட்டது மட்டுமின்றி, இந்த பிரம்மாண்ட வெற்றியை ஒரு அணியின் வெற்றியாக உருவாக்கி இருக்கின்றனர்….நம் இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு ஆட்டக்காரர்களும் நாயகர்கள்….அதுபோல தான் எங்களின் சென்னை 28 அணியினரும்….
சென்னை 28 முதல் பாகத்தில் இளம் நடிகர்களாக நடித்த அனைவரும் தற்போது வளர்ந்து விட்டனர்….`திரையுலகிற்கு ஒரு கதாநாயகர்கள் குழுவையே நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள்` என்று மூத்த கலைஞர்கள் சிலர் சொல்வதை கேட்கும் பொழுது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கின்றது….இது தான் சென்னை 28 எனக்கு தேடி தந்த பெருமை….. வர்த்தக உலகில் ஒரு நிலையான வெற்றியை எங்கள் சென்னை 28 ii தழுவி இருக்கின்றது….”
இவ்வாறு 'சென்னை 28' கேப்டன் வெங்கட்பிரபு பெருமையுடன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com