கிரிக்கெட் கடவுளை சந்தித்த கிரிக்கெட் இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,October 06 2015]

சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக தொடங்கிய ISL என்று கூறப்படும் இந்தியன் கால்பந்து லீக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் சந்திப்பு நடந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து 'சென்னை 600 028' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களும் இதே தொடக்கவிழாவில் சச்சின் தெண்டுல்கரை சந்தித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்து வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது 'கிரிக்கெட் கடவுளை சந்தித்துவிட்டேன். எனது நெடுநாள் கனவு நிறைவேறியது' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தொடக்கவிழாவில் முமேஷ் அம்பானி, நிதா அம்பானி, ஐஸ்வர்யாராய் உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்த தொடக்க விழாவின் இறுதியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பரத்-பிரேம்ஜி படத்தில் த்ரிஷா?

பரத்-பிரேம்ஜி முக்கிய வேடங்களில் நடிக்கும் 'சிம்பா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதை ஏற்கனவே பார்த்துள்ளோம்...

தமிழில் மட்டும் தாமதம் ஆகும் அனுஷ்கா படம்

சமீபத்தில் வெளியான 'பாகுபலி'க்கு இணையான படம் என கூறப்படும் அனுஷ்காவின் 'ருத்ரம்மாதேவி' திரைப்படம்...

நன்றி மறந்த கமல் முன்மொழியும் தலைவர் நமக்கு தேவையா? சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் தேதி நெருங்கி வருவதால் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணியின் வெற்றிக்காக தீவிரமாக ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர்......

தேர்தலுக்கு முன்பே வாக்குறுதியை நிறைவேற்றிய பாண்டவர் அணி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாண்டவர் அணியும் சரத்குமார் அணியும் தங்கள் அணியின் வெற்றிக்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன...

பாண்டவர் அணியின் தேர்தல் வாக்குறுதிகள். முழுவிபரம்

பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தம் 42...