15 வருடங்களுக்கு முன் முதன்முதலில்... இயக்குனர் வெங்கட்பிரபுவின் மலரும் நினைவுகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
15 வருடங்களுக்கு முன் முதன்முதலாக தான் இயக்குனர் ஆகி ’ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’ என்று கூறியதன் மலரும் நினைவுகளை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ’சென்னை 600028’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். எஸ்பிபி சரண் தயாரித்த இந்த திரைப்படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ’சென்னை 600028’ படத்திற்காக தான் முதன்முதலாக ’ஸ்டார்ட் கேமரா ஆக்சன்’ சொன்ன போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது மலரும் நினைவுகளாக பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
’சென்னை 600028’ வெற்றிக்கு பின்னர் இயக்குனர் வெங்கட்பிரபு, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது சிம்பு நடித்த ‘மாநாடு’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Wow time flies!! 15 years ago today first time I said “start camera action”!! God and u guys are very kind and still keeping me going!! Forever indebted to u guys for giving me a place in ur heart. Love u @charanproducer na #chennai600028 #EngaAreaUllaVaradhey pic.twitter.com/rRY5nPvtM0
— venkat prabhu (@vp_offl) August 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com