தனுஷே சந்தோஷப்படுவார்: 'மாநாடு' சர்ச்சை குறித்து வெங்கட்பிரபு விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா கேரக்டருக்கு தனுஷ்கோடி என்ற பெயர் வைத்தது குறித்து தனுஷ் ரசிகர்கள் இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு இயக்குனர் வெங்கட்பிரபு விளக்கம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது விளக்கம் அளித்துள்ளார். ‘மாநாடு’ திரைப்படத்தில் வில்லன் பெயர் ஒரு வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதால் அந்த பெயரை தேர்வு செய்தோம்.
ரஜினி - கமல், அஜித் - விஜய் வரிசையில் சிம்பு - தனுஷ் என்ற பெயர்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். எனவே அந்த பெயரை வைத்தால் இயல்பாகவே பவர் வந்துவிடும் என்று தான் அந்த பெயரை வைத்தோம். இந்த பெயரை கேட்டு தனுஷே சந்தோஷப்பட்டு இருப்பார் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படத்தில் ’நீ அழிக்கிறதுல அசுரன்ன்னா, நான் காக்குறதுல ’ஈஸ்வரன்’ என்று தனுஷை மறைமுகமாக குறிப்பிட்டதாக தனுஷ் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout