இதெல்லாம் உங்களுக்கு ஜோக்கா? ஆவேசமான இயக்குனர் வெங்கட்பிரபு
Send us your feedback to audioarticles@vaarta.com
இதெல்லாம் உங்களுக்கு ஜோக்காக தெரிகிறதா? என இயக்குனர் வெங்கட்பிரபு ஆவேசமாக தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவியின் மொட்டைத்தலை குறித்து தொகுப்பாளர் கிரிஸ் ராக் கேலியாகப் பேசியதை அடுத்து ஆஸ்கார் விருது வழங்கும் மேடையிலேயே அவரை கன்னத்தில் பளாரென வில்ஸ்மித் அறைந்தார். இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: வில் ஸ்மித்தின் மனைவி தொற்றுநோயால் முடியை இழந்தது உங்களுக்கு ஜோக் ஆன ஒரு விஷயமா? இது குறித்து பேசுவது உங்களுக்கு விளையாட்டாக இருக்கிறதா? ஆஸ்கர் விழாவில் அது பற்றி பேசுவது நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என கடுமையான கேள்வி எழுப்பியுள்ளார். வெங்கட்பிரபுவின் இந்த ஆவேசமான டுவீட்டிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
So you think it’s cool when #ChrisRock who thought it was “funny” to “joke” about the medical condition that #WillSmith’s wife has been diagnosed with at Oscar’s? pic.twitter.com/PBCyqbeZNR
— venkat prabhu (@vp_offl) March 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments