உலகின் எந்த விருதுக்கும் பரிந்துரைக்கலாம். 'விசாரணை' குறித்து வசந்தபாலன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விசாரணை' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச விருதுகளை பெற்று சிறப்பு பெற்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறனுக்கு பாராட்டு தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் 'விசாரணை' திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குனர் வசந்தபாலன், 'இதுவரை வெளிவந்துள்ள போலீஸ் சினிமாக்களில் போலீஸ் என்பவன் மனிதன் அல்ல ஒரு ஆகாச சூரன், வல்லவன், அதி வீரன், மகாபலசாலி என்றெல்லாம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் போலீஸின் நிலை என்ன? போலீஸ் ஸ்டேசனுக்குள் என்ன தான் நடக்கிறது? என்பதையும், அதற்குள் நடக்கும் நுண்ணரசியலைத் தொட்டு தொடரும் ஆபத்தான அரசியலை மெல்ல மெல்ல 'விசாரணை' படம் விவரிக்கிறது.
இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு நாம் போலீஸ் பணிக்குப் போகக்கூடாது என்ற எண்ணமும், எக்காரணம் கொண்டும் எதற்கேனும் போலீஸிடம் சிக்கி விடவே கூடாது என்ற பேரச்சமும் ஏற்படும். இந்தப் படம் எடுக்கப்பட்ட விதம் மிக செம்மையாக உள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் மிக துல்லியமாக நடித்துள்ளார்கள். நுண்மையாக எடுக்கும் படமே உலகப்படம். அப்படிப் பார்க்கையில் தமிழில் இருந்து நாம் 'விசாரணை' திரைப்படத்தை உலகின் எந்த உயரிய விருதுக்கும் பரிந்துரைக்கலாம்' இவ்வாறு இயக்குனர் வசந்தபாலன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கமல்ஹாசன், வசந்தபாலன் ஆகியோர்களின் கருத்துக்களுக்கு பின்னர் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments