உலகின் எந்த விருதுக்கும் பரிந்துரைக்கலாம். 'விசாரணை' குறித்து வசந்தபாலன்

  • IndiaGlitz, [Monday,February 01 2016]

தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விசாரணை' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச விருதுகளை பெற்று சிறப்பு பெற்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறனுக்கு பாராட்டு தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் 'விசாரணை' திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குனர் வசந்தபாலன், 'இதுவரை வெளிவந்துள்ள போலீஸ் சினிமாக்களில் போலீஸ் என்பவன் மனிதன் அல்ல ஒரு ஆகாச சூரன், வல்லவன், அதி வீரன், மகாபலசாலி என்றெல்லாம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் போலீஸின் நிலை என்ன? போலீஸ் ஸ்டேசனுக்குள் என்ன தான் நடக்கிறது? என்பதையும், அதற்குள் நடக்கும் நுண்ணரசியலைத் தொட்டு தொடரும் ஆபத்தான அரசியலை மெல்ல மெல்ல 'விசாரணை' படம் விவரிக்கிறது.

இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு நாம் போலீஸ் பணிக்குப் போகக்கூடாது என்ற எண்ணமும், எக்காரணம் கொண்டும் எதற்கேனும் போலீஸிடம் சிக்கி விடவே கூடாது என்ற பேரச்சமும் ஏற்படும். இந்தப் படம் எடுக்கப்பட்ட விதம் மிக செம்மையாக உள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் மிக துல்லியமாக நடித்துள்ளார்கள். நுண்மையாக எடுக்கும் படமே உலகப்படம். அப்படிப் பார்க்கையில் தமிழில் இருந்து நாம் 'விசாரணை' திரைப்படத்தை உலகின் எந்த உயரிய விருதுக்கும் பரிந்துரைக்கலாம்' இவ்வாறு இயக்குனர் வசந்தபாலன் கூறியுள்ளார்.

பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கமல்ஹாசன், வசந்தபாலன் ஆகியோர்களின் கருத்துக்களுக்கு பின்னர் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆர்யாவுக்கு இரண்டாவது தோல்வி

ஒருபுறம் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை வென்று சாதானை படைத்து வந்துள்ள நிலையில் ...

'கத்தி' - 'மிருதன்' படங்களுக்கு உள்ள அபூர்வ ஒற்றுமை

இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கத்தி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே...

'கபாலி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இளையதலைமுறை நடிகர்களுக்கு இணையாக ஒரே நேரத்தில் 'கபாலி' மற்றும் '2.0'

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படம்?

பிரபல இயக்குனர் மணிரத்னம் ஏற்கனவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்களான 'இருவர்' மற்றும் 'குரு'...

'மாரி 2' உருவாகுவது எப்போது?

தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய்ஜேசுதாஸ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'மாரி' படம்...