பவதாரிணி பாடும் பாடலில் ஒரு குழந்தையும், தெய்வமும் கலந்து இருக்கும்: பிரபல இயக்குனரின் இரங்கல் பதிவு..!
- IndiaGlitz, [Sunday,January 28 2024]
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு குறித்து பிரபல இயக்குனர் வசந்த பாலன் தனது சமூக வலைதளத்தில் இரங்கல் பதிவு செய்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
கார்த்திக் ராஜா உடன் என்னுடைய முதல் படம் அமைந்தது. அந்த படத்திற்காக அடிக்கடி ராஜா சார் வீட்டிற்கு போவேன். இளையராஜா அவர்களின் தி நகர் வீட்டை இளையராஜா ஒரு கதையே எழுதலாம். அத்தனை சம்பவங்கள், அவ்வளவு மனிதர்கள் வருவார்கள், போவார்கள். பரபரப்பாக இருக்கும். ராஜா சாரை சந்திக்க வருகிற நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கார்த்திக், யுவனை சந்திக்க வருகிற இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள் இருப்பார்கள். அதேபோல் யுவன், பவதாரணியின் நண்பர்கள் வட்டமும் அதிகம்.
சில நாட்களில் அதிகமாக கூட்டம் வந்து விடும். சிரிப்பும், பாட்டும், விளையாட்டுமாகவே வீடு முழுவதும் ஒலிக்கும். அதைப் பார்க்கும்போது வருடம் 16 படத்தில் வருகிற பழமுதிர்ச்சோலை வருடம் தான் கேட்கும். அவர்கள் வீட்டில் நடக்கும் நவராத்திரியில் பவதாரணியை அவர்கள் அம்மா இழுத்து வந்து பாட வைப்பார்கள். அது சிறு தேவதையுடைய குரல். பாடிவிட்டு பவதாரணி மீண்டும் விளையாட ஓடிவிடுவார். அவர் பலமுறை நேராக பாடி கொண்டு கேட்டிருக்கிறேன். என்னுடைய முதல் படத்தில் முட்டைக்குள் இருக்கும் போது முட்டைக்குள் இருக்கும் போது என்னதான் சொல்லுச்சாம் கோழி குஞ்சு? என்ற சின்ன பாடலை பவதாரணி பாடியிருந்தார்.
பவதாரணி பாடும் பாடல் ஒரு குழந்தையும், தெய்வமும் கலந்து இருக்கும். மயில் போல பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஜனனி, ஜனனி பாடல் ஆன்மாவை உருக்கும் ஜனனி, இப்படி இருக்கும் போது பவதாரணி இழப்பு செய்தி நேற்றைய நாளை வண்ணம் இல்லாத ஒலி, ஒளியில்லாத இசை இல்லா நாளாக மாற்றி விட்டது. பவதாரணி 47 வயது என்பதை மூளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மயில் போல பொண்ணு தான் இரக்கமற்ற காலம் எல்லாவற்றையும் இப்படித்தான் குலைத்து போட்டு விளையாடுமோ?