'தளபதி 66' இந்த வகை படமா? இயக்குனரின் பேட்டியால் ரசிகர்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Tuesday,November 02 2021]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் வம்சி சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படம் எப்படிப்பட்ட படம் என்பது குறித்து கோடிட்டு உள்ளார். அதில் அவர், ‘என்னுடைய திரைக்கதையில் பொதுவாக மனித உறவுகள் மற்றும் எமோஷன்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றும் அந்த வகையில் விஜய் அவர்களின் இந்த படத்திலும் இந்த இரண்டு அம்சங்களும் இருக்கும் என்றும் அவருடைய ஸ்டார் வேல்யூ மற்றும் ரசிகர்களை மனதில் வைத்து இந்த படத்தின் திரைக்கதையை அமைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு குடும்ப சென்டிமென்ட் கலந்த எமோஷன் படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் அதிரடி ஆக்ஷன் படத்தில் மட்டுமே நடித்து வருவதால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் நடிக்கும் குடும்ப சென்டிமென்ட் படமாக ‘தளபதி 66’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தில் கதாநாயகியாக கைரா அத்வானி நடிக்கவிருப்பதாகவும் மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் மகேஷ்பாபுவின் மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த படத்திற்கு தமன் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

More News

ஓபன் கோட்டில் போட்டோஷுட்… ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த மாளவிகா மோகனன்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற நடிகையாக வலம்வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

பிரியங்கா கன்னத்தில் விழுந்த அறை: சந்திரமுகியாக மாறிய இசை: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

பிரியங்காவின் கன்னத்தில் விழுந்த அறை, சந்திரமுகியாக மாறிய இசைவாணி உள்பட பல காட்சிகள் இன்றைய 2-வது புறமோ வீடியோவில் வெளியாகியுள்ளது.

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வித்தியாசமான நாமினேஷன் பிராசஸ் நடந்தது என்பதையும் ஒவ்வொரு போட்டியாளரும் எந்த போட்டியாளர்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து

ஆன்மீகப் பயணம் சென்றுள்ள இளம் நடிகைகள்… கவனம் ஈர்க்கும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் இளம் வயதிலேயே நம்பிக்கை நட்சத்திரமாக  மாறியிருப்பவர் நடிகை சாரா அலிகான். காதலை

ஆளுமை சக்தி கொண்டு ஆட்டம் போடும் நிரூப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களின் காயின்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த காயின்கள் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் கூடுதல் சக்திகள் அளிக்கப்படும் என்றும் பிக்பாஸ் அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.