இயக்குனர் திருமுருகன் அடுத்த சீரியல்.. அறிவிப்பிலே ஒரு ட்விஸ்ட்..!

  • IndiaGlitz, [Tuesday,April 16 2024]

திரைப்படம் மற்றும் சின்னத்திரை சீரியல் இயக்குனர் திருமுருகன் தனது அடுத்த ப்ராஜெக்ட் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அதிலும் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பரத் நடித்த ’எம்டன் மகன்’ ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருமுருகன் பல சீரியல்களை இயக்கினார் என்பது தெரிந்தது.

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ’மெட்டி ஒலி’ ’நாதஸ்வரம்’ ’தேன்நிலவு’ ’குலதெய்வம்’ ’கல்யாண வீடு’ ஆகிய சீரியல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ’கல்யாண வீடு’ என்ற சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு முடிந்த நிலையில் அவரது அடுத்த சீரியல் குறித்த எந்த விதமான அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் அவர் ஒரு புதிய புரொஜக்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த புரொஜக்ட் எந்த டிவியிலும் ஒளிபரப்பாகாது என்றும் அவரது யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

குடும்ப கதைகளை எதார்த்தமாக எளிமையான கேரக்டர்களை வைத்து மிகப்பெரிய வெற்றி சீரியல்களை இயக்கிய திருமுருகனின் அடுத்த ப்ராஜெக்ட் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.