ஐஸ்வர்யாவை காப்பாற்ற கமலை டேமேஜ் செய்யும் பிக்பாஸ்: பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,September 14 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களுக்கு காட்டாத அக்கறையை ஐஸ்வர்யா மீது மட்டும் ஆரம்பம் முதலே பிக்பாஸ் காட்டி வருவது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது. கடந்த கமல்ஹாசனும் ஐஸ்வர்யாவை கடுமையாகவே பேசிவிட்டார். இதனால் ஐஸ்வர்யாவின் ஆர்மியினர் தற்போது கமல்ஹாசனை தாக்கி விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்துள்ள பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவுக்கு அளவுக்கு மீறி ஜால்ரா அடிக்கின்றனர். கமல்ஹாசன் ஐஸ்வர்யாவை கண்டித்தது தவறு என்று மறைமுகமாக இவர்கள் கூறுவதாகவே தெரிகிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் திரு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், 'ஐஸ்வர்யாவை நல்லவர் போல் காட்டுவதற்காக கமல் அவர்களையும் டேமேஜ் செய்ய தயங்க மாட்டார்கள் என்று மனக்குமுறலுடன் கூறியுள்ளார். இதனை உண்மை என பல டுவிட்டர் பயனாளிகள் கூறி வருகின்றனர். மொத்தத்தில் பிக்பாஸூக்கு கமலைவிட ஐஸ்வர்யா தான் முக்கியம் என்று தெரிகிறது.