close
Choose your channels

இதை செய்யாமல் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.  தங்கர்பச்சான்

Wednesday, March 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதையெல்லாம் செய்யாமல் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம் என பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்க் 8ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் என்பதும் சர்வதேச மகளிர் தினம் இன்று இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

சமூக வலைதளங்களில் மகளிர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக நலனில் அக்கறை கொண்ட இயக்குனரான தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து குறித்து வித்தியாசமாக தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது:

மது, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்களின் தாலியை அறுத்துக் கொண்டிருக்கிறது! நடுத்தெருவில் நிற்கும் அந்த குழந்தைகள், குடும்பங்களின் வாழ்வை பற்றி அக்கரை கொள்ளாமல் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். குடிநோயாளிகளால் வாழ்வை இழக்கும் குடும்பப் பெண்களுக்கு யார்தான் துணை?
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment