மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இல்லை.. இயக்குனர் தங்கர்பச்சான் வேதனை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இல்லை என இயக்குனர் தங்கர்பச்சான் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக!
- வள்ளலார் இராமலிங்க அடிகளார்
மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இன்று கள்ளச்சாராயத்தால் பறிபோன நாற்பது உயிர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாடு அரசு விற்கும் கொடிய மதுவினால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இம்மக்கள் செத்து மடிவது குறித்து பேச மறுக்கின்றோம்!
நிர்வாக திறனின்றி ஆட்சி செய்து மக்களின் உயிர்பற்றி அக்கறை கொள்ளாமல் மடிய காரணமாக இருந்துவிட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்தே இழப்பீடு தரும் கொடுமைகளை எல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சகித்துக் கொள்வது?
தாலியை இழந்து நிற்கும் இந்த குடும்பங்களின் பெண்களுக்கு இனி துணை யார்? தந்தையை இழந்து நிற்கும் இந்த பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு இனி பொறுப்பு ஏற்க போவது யார்? உழைக்கும் மக்களின் உடலில் உள்ள பலத்தை அழித்து மனித வளத்தை அழித்தொழித்து, அனைத்து குற்றங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் மதுவை விற்காமல் இனியாவது ஆட்சி செய்யப் பாருங்கள். இப்படிப்பட்ட இழப்புகள் உங்கள் இல்லத்தில் ஏற்பட்டிருந்தால் தெரியும் அது என்ன மாதிரியான வலி என்பது?
கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக!
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) June 20, 2024
- வள்ளலார் இராமலிங்க அடிகளார்
மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இன்று கள்ளச்சாராயத்தால் பறிபோன நாற்பது உயிர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாடு அரசு விற்கும்… pic.twitter.com/eNUSjRd6Ta
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments