ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர் சமுதாயம் வேடிக்கை பார்க்கிறதே.. என்.எல்.சி விவகாரம் குறித்து பிரபல இயக்குனர்..!
- IndiaGlitz, [Saturday,July 29 2023]
என்எல்சி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரபல இயக்குனர் தங்கர்பச்சான், ‘ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர் சமுதாயம் இந்த பிரச்சனைக்கு போராடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: இந்த நிலம் என் நிலம் இவர்கள் என் மக்கள். என்எல்சி நிறுவனத்தால் எவை எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதெல்லாம் இதை ஒரு செய்தியாக பார்த்துவிட்டு கடந்து செல்பவர்களுக்கு தெரியாது.
தமிழகத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் 68 ஆண்டுகளாக மின்சாரம் தந்து இன்று கதறிக் கொண்டிருக்கிற என் மக்கள் தான் தமிழகத்திலேயே அதிகப்படியான நிலத்தை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். உண்மையிலேயே எங்களுடைய கதறல் உங்களின் காதுகளுக்கு ஏற்பட்டவில்லையா? எதற்காக போராடுகிறோம் என்பது இன்னும் விளங்கவில்லையா?
இது பாமக சிக்கலோ அல்லது வன்னிய சமுதாய மக்களின் சிக்கலோ அல்ல. ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதார சிக்கல். ஜல்லிக்கட்டு மாடுகளை காப்பாற்றுவதற்காக போராடிய இளைஞர் சமுதாயம் இன்று இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
கல்வி கற்று எத்தனை பட்டங்கள் பெற்றாலும் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத, போராடத் தெரியாத சமூகம், இறுதி வரை அரசியல் கள்ளர்களின் காலடியில் அடிமையாகவே கிடந்து வாக்குகளை மட்டும் செலுத்திவிட்டு புலம்பியே செத்துப் போகும்’ என தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
நமக்கெல்லாம் காலம் காலமாக உணவு தந்து கொண்டிருக்கும் விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி தவிர தமிழகத்தின் எந்த ஒரு கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் இறங்கவில்லை. (1/2) pic.twitter.com/xc4tbA9mGE
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) July 26, 2023
இந்த நிலம் என் நிலம்! இவர்கள் என் மக்கள்!
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) July 28, 2023
ஜல்லிக்கட்டு மாடுகளை காப்பாற்றுவதற்காகப் போராடிய இளைஞர் சமுதாயம் இன்று இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே! நியாயம்தானா?#NLC #Neyveli #NLCநிலம்_விவகாரம் #Cuddalore pic.twitter.com/2yumNYzKGy