வேறு எதுவுமே இல்லையா? இளையராஜா விவகாரம் குறித்து தங்கர்பச்சான் கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பல்வேறு திரையுலகினர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் இதுகுறித்து கூறியபோது, இளையராஜா பிரச்சனை தவிர பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: இளையராஜா கூறிய கருத்து மட்டும் தான் இப்போது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும், போராடவும் வேறு எதுவுமே இல்லையா?
மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அரசியல் பிழைப்புவாதிகளும் ஊடக பிழைப்புவாதிகளும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரிபொருள் உயர்வு, தொடர் மின்வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் பற்றி இதே போல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா? என்ற கேள்வியை இயக்குனர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேறெதுவுமே இல்லையா? pic.twitter.com/62BZXOjZQe
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) April 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments