வேறு எதுவுமே இல்லையா? இளையராஜா விவகாரம் குறித்து தங்கர்பச்சான் கேள்வி!

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பல்வேறு திரையுலகினர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் இதுகுறித்து கூறியபோது, இளையராஜா பிரச்சனை தவிர பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: இளையராஜா கூறிய கருத்து மட்டும் தான் இப்போது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும், போராடவும் வேறு எதுவுமே இல்லையா?

மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அரசியல் பிழைப்புவாதிகளும் ஊடக பிழைப்புவாதிகளும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரிபொருள் உயர்வு, தொடர் மின்வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் பற்றி இதே போல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா? என்ற கேள்வியை இயக்குனர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் செம டான்ஸ்: நடன இயக்குனர் யார் தெரியுமா? 

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின்னர் முக்கிய வேடத்தில் நடித்துவரும் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது

ஆன்மீகத்தில் ரஜினிகாந்த் குடும்பம்: வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு ஆன்மீகவாதி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது குடும்பத்தினர் முழுவதுமே ஆன்மீகத்தில் மூழ்கியுள்ள புகைப்படம்

இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்து வரும் விஜய் பட நாயகி: வைரல் புகைப்படங்கள்!

விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தற்போது இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

'தளபதி 66' படத்தில் முக்கிய மாற்றம் செய்த விஜய்: வேறு வழியின்றி ஏற்று கொண்ட படக்குழு!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் விஜய் ஒரு முக்கிய மாற்றத்தை கூறியதாகவும் அந்த மாற்றத்தை படக்குழுவினர் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தளபதி 66: விஜய் சகோதரராக 90களின் வெள்ளிவிழா நாயகன்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் 90களில் வெள்ளி விழாப் படங்களை கொடுத்த நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.