கார் வேண்டாம், வேறு ஏதாவது கொடுங்கள்: முதல்வருக்கு இயக்குனர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Tuesday,January 18 2022]

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கார் பரிசு அளிப்பதற்கு பதிலாக வேறு ஏதேனும் பரிசு அளிக்கலாம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குநர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய இயக்குநர் தங்கர்பச்சான், ‘காரின் தொகைக்கு ஈடாக உழவுக்கருவிகள், மாடுகள், நிலம் போன்றவற்றை தந்து வீரர்கள் வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தலாம் என்றும், காரை வைத்துக்கொண்டு பெட்ரோல் டீசல் போடவே வாழ்நாள் முழுவதும் அவர்கள் போராட வேண்டியிருக்கும் என்றும், தயவுசெய்து முதலமைச்சர் இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தங்கர்பச்சானின் இந்த வேண்டுகோள் பரிசீலனை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

ரொனால்டோவுக்கு கிடைத்த சிறப்பு விருது… உற்சாகத்தில் பொங்கும் ரசிகர்கள்!

சர்வதேச கால்பந்தில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்காக

அகமதாபாத் அணி எடுத்த திடீர் முடிவு… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 12, 13 ஆம்

உள்ளே சண்டை வெளியே நட்பு: பிக்பாஸ் போட்டியாளர்களின் வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்கள் முதல் சீசனில் இருந்து 5-வது சைசன் வரை உள்ள 100 நாட்களில் காரசாரமாக சண்டை போட்டுக்கொண்டாலும் வெளியே வந்த அடுத்த நிமிஷமே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர்

மிஸஸ் வேர்ல்ட் போட்டியில் இந்திய அழகி சாதனை… சர்வதேச அளவில் அங்கீகாரம்!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்ற மிஸஸ் வேர்ல்ட் 2022 போட்டியில் இந்தியாவை சேர்ந்த அழகி ஒருவர்

சோகமான செல்ஃபிக்களை 7 கோடிக்கு விற்ற மாணவன்… ஆச்சர்யத் தகவல்!

டிஜிட்டல் உலகில் நடக்கும் சில சம்பவங்கள் உண்மையிலேயே நம்மை