டி.ராஜேந்தருக்கு கிடைத்த அசத்தலான வெற்றி!

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 16 கமிட்டி உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யபப்ட்டனர். நடிகர் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகிஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

நேற்று காலை 9 மணி நடைபெற்ற இந்த தேர்தலில் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

இந்த தேர்தலின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 235 வாக்குகள் கிடைத்தன. மேலும் செயலாளர் பதவிக்கு T.மன்னன், பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

More News

உதயநிதியின் 'வசதியான வயதானவர்' டுவீட்டுக்கு ராதாரவியின் பதில்!

திமுக இளைஞரணி  செயலாளரும் நடிகருமான உதயநிதி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் 'தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை

என் பேச்சிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சம்மந்தமில்லை: ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதில் இருந்து அவர் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

ரஜினியின் கருத்து எனக்கு சுத்தமாக புரியவில்லை: ரஜினி நண்பரின் மகன் பேட்டி!

குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்த ரஜினியின் கருத்து தெளிவாக இல்லை என்றும் தனக்கு சுத்தமாக புரியவில்லை என்றும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ப சிதம்பரம்

அமீரின் 'நாற்காலி'யில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

'மௌனம் பேசியதே, ராம், மற்றும் 'பருத்தி வீரன்' உட்பட ஒரு சில படங்களை இயக்கிவரும் ஒரு சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான இயக்குனர் அமீர்

திமுக பேரணியில் விஜய் பங்கேற்பாரா? எஸ்.ஏ.சி பதில்

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாளை பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்த உள்ளது.